காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்;பட்ட கலை ஆர்வலர்களுக்கு குறுந்திரைப்பட பயிற்சிப்பட்டறை நேற்று (22) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பயிற்சிப்பட்டறையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கலா மண்றங்கள்இ பாடசாலை மாணவர்கள்இ இளம் கலைஞர்கள் உட்பட சுமார் 40 பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும்இ சிறகு நுணி கலை அரங்கின் பணிப்பாளருமான ஆத்மா ஜாபிர்இ கலைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வளவாளரால் மேலதி பயிற்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது குறுந்திரைப்பட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரினால் வழங்கப்படது.
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். ஜவாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ரீ. குணபால மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
23.02.2022