கோவை
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இங்கு திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வாக்குகளே என அப்போது கூறப்பட்டது. திமுகவுக்குக் கிடைக்க வேண்டிய நடுநிலை வாக்குகளை ம நீ ம பெற்றதாகக் கருத்து இருந்தது.
தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியின் 60 வார்டுகள் கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அமைந்துள்ளது. இந்த வார்டுகளில் ம நீ ம கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு இந்த கட்சியின் வேட்பாளர்கள் யாரும் 1000 வாக்குகள் கூட வாங்கவில்லை.
ம நீ ம கட்சியின் வேட்பாளர்கள் பல வார்டுகளில் 100க்கும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். இவர்களில் அதிக பட்சமாக அக்கட்சியின் வேட்பாளர் சிவமணி என்பவர் 81 ஆம் வார்டில் 983 வாக்குகள் பெற்றுள்ளார். ம நீ ம கட்சி தாம் இங்கு போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.