கோவை: சொல்லியடித்த செந்தில் பாலாஜி… வேலுமணி சறுக்கியது எங்கே?!

2021 மே 2-ம் தேதி 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாதது முதல்வர் மு.க. ஸ்டாலின் மனதில் கவலையை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

எஸ்.பி வேலுமணி

இந்தப் பிரச்னைகளை போக்க ஸ்டாலின் கோவைக்கு அனுப்பிய அஸ்திரம் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆரம்பத்தில் வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.கவினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

“யார் வந்தாலும் கோவை எங்கள் கோட்டை” என்று கூறிக் கொண்டிருந்தனர். செந்தில் பாலாஜி அதிகம் பேச மாட்டார் என்பதால் உடன்பிறப்புகள் அவர் என்ன யோசிக்கிறார் என்பது தெரியாமல் குழம்பினர். வழக்கம் போல வேலுமணியின் ஆதிக்கத்தை நினைத்தும் உடன்பிறப்புகள் புலம்பினர். அதற்கு செந்தில் பாலாஜி, “நம்ம தான் ஜெயிக்கறோம்.

செந்தில் பாலாஜி

நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம். நமக்கு பின்னாடி ஓடறவங்களை பத்தி யோசிக்கக் கூடாது.” என்று கூறி வியூகங்களை வகுத்தார். பூத் கமிட்டியை வலுப்படுத்தினார். கரூரில் இருந்து தனது படைகளை இறக்கினார்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அ.தி.மு.கவுக்கு இணையாக களப்பணியாற்றியது தி.மு.க. ஆரம்பத்தில் அ.தி.மு.கவும் கோவையை தி.மு.கவுக்கு எளிதாக எல்லாம் விட்டுக் கொடுக்கவில்லை. தேர்தல் வியூகங்கள் எல்லாம் வழக்கம் போல பலமாகவே வகுத்தனர். இந்தத் தேர்தலுக்கு தி.மு.கவை விட தயாராக இருந்ததும் அ.தி.மு.கதான்.

கோவை திமுக கூட்டம்

தேர்தல் தேதி அறிவித்ததும் இரண்டு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தி.மு.கவில் பெரிய அளவுக்கு அதிருப்தி கிளம்பினாலும், ஒருகட்டத்தில் செந்தில் பாலாஜி அதை கன்ட்ரோல் செய்துவிட்டார்.

அதேநேரத்தில் அ.தி.மு.கவிலும் வேட்பாளர் பட்டியலில் அதிருப்தி இருக்கவே செய்தது. அது பெரிய அளவுக்கு வெளியில் தெரியாவிடினும் தேர்தல் நெருங்க நெருங்க ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளுக்குள் புகைந்து கொண்டேயிருந்தனர். வேலுமணியின் ஆதிக்கத்துக்கு எதிரான அதிருப்தி குரல்கள் அதிகம் ஒலித்தது.

ஹாட்பாக்ஸ்

மேயர் வேட்பாளர் தேர்வில் இருந்து, வேலுமணி எடுத்த சில முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக அமைந்தன. தி.மு.க தரப்பில் ஹாட்பாக்ஸ், கொலுசு, ரூ.1,000 – 5,000 வரை இறக்கினர்களாம். இதைக் கண்டு பல இடங்களில் அ.தி.முகவினர் மிரண்டு போயினர்.

அதற்குள்ளாக வேலுமணி சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் டெபாசிட் தொகையை முடக்கி, அவரை கைது செய்யவும் திட்டமிட்டது காவல்துறை. கோவை தேர்தல் களத்தில் முதல்முறையாக வேலுமணி தரப்பில் பதற்றம் வெளிப்பட்டது. கரூர்காரர்களின் ஆதிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா செய்து, “தி.மு.க வெற்றி பெற்றதா அறிவிச்சுடுங்க.” என்று கூறினார்.

வேலுமணி

“பல லட்சம் தொண்டர் படை கொண்ட அ.தி.மு.க, கரூரில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை கண்டு பதறலாமா?” என்று அ.தி.மு.கவினரே குமுறினர். வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை காவல்துறை குண்டுகட்டாக தூக்கியதும், அ.தி.மு.க தரப்பில் இன்னும் அதிர்ச்சி அதிகமானது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அ.தி.மு.க முற்றிலும் முடங்கியது. பல இடங்களில் பணப்பட்டுவாடாவும் முழுமையாக செய்யப்படவில்லை. அதை பயன்படுத்தி தி.மு.க வாக்குப்பதிவு நாள்வரை களத்தில் இறங்கியடித்தது. அதன் பலனாக கோவை மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியதுடன்,

தி.மு.க வெற்றி

மாவட்டத்தில் உள்ள 7 நகாரட்சிளையும் தூக்கியது தி.மு.க. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற முடிந்தது. வேலுமணின் சொந்த வார்டில் கூட தி.மு.க தான் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.