உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை சீல்நாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள கண்மாய் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த பொது நல மனு நீதிபதிகள் பரேஸ்உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ”இது போன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் தான் தாக்கல் செய்ய வேண்டும். கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்றால் முதலில் தாசில்தாரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன் பின்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM