இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஜியோ, அவ்வப்போது சில புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும்.
அந்த வகையில் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளார்களை நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள உதவும். அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும். அதோடு ஜியோ பயனர்களுக்கும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
2 டாப் திட்டங்கள்
இந்த புதிய திட்டங்கள் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் பிரீமிய வசதிகளுடன் உள்ளன. இந்த திட்டங்களின் விலை முறையே 1499 மற்றும் 4199 ரூபாய் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வளவு விலையா? நமக்கெல்லாம் இது செட்டே ஆகாதுப்பா? என்று நினைக்கிறீர்களா? அவசரப்படாதீங்க. ஏனெனில் அந்தளவுக்கு சலுகைகளும் உள்ளன.
வருட திட்டங்கள்
உண்மையில் இந்த திட்டத்தில் ஒன்று வருட திட்டங்கள் என்பதால், வருடத்திற்கு கவலையே படத் தேவையில்லை. மேலும் இந்த திட்டத்தில் 4K தரத்தில் உள்ளடக்கத்தினை அணுக முடியும். ஜியோமார்ட் கேஷ்பேக்கும் கிடைக்கிறது. இந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனர்கள் பல மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
84 நாட்கள் திட்டம்
ஜியோவின் இந்த புதிய அறிமுக திட்டத்தில் 1499 ரூபாய் பேக்கில், தினசரி 2 ஜியோபி டேட்டா, அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இந்த நன்மைகள் 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இவற்றுடன் ஜியோ ஆப்பிற்கான சந்தாவும் கிடைக்கிறது.
1 வருட திட்டம்
4199 ரூபாய் திட்டமானது தினசரி 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 365 நாட்களாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ்.எம் எஸ் கிடைக்கும். மொத்தத்தில் இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இதிலும் ஜியோ ஆப் சேவையும் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் ஒரு வருட டிஸ்னி மற்றும் ஹாட் ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவும் கிடைக்கிறது.
Reliance jio’s new DIsney + Hotstar premium packs, key details
Reliance jio’s new DIsney + Hotstar premium packs, key details/ஜியோவின் 2 புதிய ஹாட் திட்டங்கள்.. 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் ஏராளமான சலுகைகள்!