பர்கினா பாசோ நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 60 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான, பர்கினா பாசோ நாட்டின், பொனி மாகாணத்தைச் சேர்ந்த பொம்ப்லோரா பகுதியில், தங்கம் எடுப்பதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடி, திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது.
இந்த விபத்தில் சிக்கி, சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், 55 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடி விபத்து
குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்கள்: ஜோ பைடன் அறிவிப்பு!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அதிகப்படியான வெடிப்பொருளை சுரங்கத்தில் வைத்திருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் சுரங்கப் பணிகளை முன்னெடுப்பதன் காரணமாக இவ்வாறு விபத்துகள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.