தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.
அதன்படி, தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்