வேலூரில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வேலூர் பிரதான பஜார் அருகே சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று காலை மசூதி கட்ட ஏற்பாடுகள் நடைபெறவே, அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மெயின் பஜாரில் உள்ள நகை, அடகு கடைகள், டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வியாபாரிகள் உடன் இணைந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டனர். இதேபோல், மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து இஸ்லாமியர்களும் அங்கு குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவரிந்த வேலூர் உதவி ஆட்சியர் விஷ்ணுபிரியா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதே சமயத்தில் இரு தரப்பினரும் கலைந்து செல்லாமல் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.