மும்பை,
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மந்திரி நவாப் மாலிக் , சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை அலுவலகம் அழைத்து சென்று அதிகாரிகள் காலை 8:30 மணி முதல் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கை மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது. காலை முதல் நவாப் மாலிக்கிடம் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறையினருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.