புதுடில்லி: ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரின் முதல்கட்ட போட்டிகள் தற்போது நடக்கிறது. உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி, இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர். ‘டாப்-8’ இடம் பெறுபவர்கள் காலிறுதிக்கு முன்னேறுவர். 8வது சுற்றில் 16 வயது பிரக்ஞானந்தா, ஐந்து முறை உலக சாம்பியன், உலகின் ‘நம்பர்-1’ வீரர் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவை பாராட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்..
புதுடில்லி: ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரின் முதல்கட்ட போட்டிகள் தற்போது நடக்கிறது. உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.