மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிற்பகல் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தாவூத் இப்ராஹிம் பண மோசடி வழக்குடன் தொடர்புடையாக எழுந்த குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை அழைத்துச் சென்ற தகவல் அறிந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள நவாப் மாலிக் தொண்டர்களை பார்த்து, ‘‘கைது செய்யப்பட்டேன். ஆனால் பயப்படமாட்டேன். நாம் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்’’ என ஆவேசமாகக் கூறினார்.
இதையும் படியுங்கள்… நீங்களும் இதைபோன்று அழைத்துச் செல்லப்படுவீர்கள்: சஞ்சய் ராவத் எச்சரிக்கை