சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே சிறையில் உள்ளார்.
சென்னை ராயபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் இன்று காலை மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2-வது வழக்கு இன்று காலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டனர்.
ஜெயக்குமாரின் முதல் வழக்கில் ஜாமின் மனு மீது சற்று நேரத்தில் விசாரணை தொடங்கவுள்ள நிலையில் 2வது வழக்கில் மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது