புதுடெல்லி:
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016-ல் போடப்பட்டது.
இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே 32 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், மேலும் 3 விமானங்கள் இந்தியா வந்தடைந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 35 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு விமானம் விரைவில் இந்தியா வந்தடையும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…கச்சா எண்ணெய் விலை 100 டாலர்: பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்