இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதுடன் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால் மட்டுமே பாக்.குடன் பேச்சு நடத்த முடியும்’ என பலமுறை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிவி’ பேட்டி ஒன்றில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: எல்லா நாட்டுடனும் வர்த்தக உறவு நீடிக்க வேண்டும் என்று தான் பாக். விரும்புகிறது.
இந்தியா – பாக். இடையே பகை உணர்வு நீடிப்பதால் அந்நாட்டுடன் குறைந்த அளவிலான வர்த்தகம் மட்டுமே நடக்கிறது.இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புகிறேன். இந்த பிரச்னை முடிவுக்கு வந்தால் கோடிக் கணக்கான மக்கள் பயன் அடைவர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement