ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் ரஷ்யாவுடனான தனது நாட்டின் மோதலில் தீர்மானிக்கப்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் Kyiv-ல் பேசிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி , Donetsk மற்றும் Luhanskநகரங்களை சுதந்திரமாக அங்கீகரித்த ரஷ்யாவின் முடிவு, உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விவரித்தார்.
ரஷ்ய கூட்டமைப்பின் குற்றங்கள் பற்றிய எங்கள் மதிப்பீட்டில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம்.இது உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்புச் செயலாகும்.
Donbas-ன் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ரஷ்ய இராணுவம் பிரிவினைவாதிகள் சீருடையின் பின்னால் மறைந்துள்ளது. இது மின்ஸ்க் ஒப்பந்தங்களிலிருந்து ஒருதலைப்பட்சமான விலகல் ஆகும்.
இது உக்ரேனிய Donbas மீதான நிலைமையை ஒழுங்குபடுத்துவதற்கான, உக்ரேனிய மற்றும் சர்வதேச முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
இந்த குற்றத்திற்கு சர்வதேச சமூகத்தின் பதில் தீர்க்கமானதாகவும் உடனடி மற்றும் கடுமையானதாகவும் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்து அறிமுகப்படுத்துவதற்கு எடுத்த முடிவுகளை உக்ரைன் வரவேற்கிறது.
Nord Stream 2 திட்டத்தை நிறுத்தும் ஜேர்மனியின் முடிவு பாராட்டுக்குரியது.
இப்போது ரஷ்யாவுடனான உக்ரைன் மோதலில் ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.