ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தரப்படும் என்றும் நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.
மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்த ஜோ பைடன், மேற்கத்திய நாடுகளில் இருந்து அனைத்து நிதியுதவிகளும் ரஷ்யாவுக்கு நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக பதற்றத்தைத் தணிக்க ரஷ்ய அதிபர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.