எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி அறிவிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்- 36 மணிநேரம் இருளில் மூழ்கிய சண்டிகர்