வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றினால் எளியமுறையில் குறைக்கலாம்.
தற்போது வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்க கூடிய துலாசனம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
செய்முறை
- தரையின் மீது யோகாசன விரிப்பை விரித்து கொள்ளவும். அதன் மேல் கால்களை நேராக நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.
- பின்பு இடது கால் மேலே இருக்கும் படியாக சம்மணமிட்டு உட்காரவும். 2 கைகளையும் இடுப்புக்கு பக்கவாட்டில் உள்ளங்கைகள் தரையில் படும்படி ஊன்றிக்கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியே விட வேண்டும்.
- கைகளுக்கு அழுத்தம் கொத்தவாறு உடம்பை தரையிலிருந்து மேலே தூக்கவும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்து பின்பு மெதுவாக மீண்டும் தரையில் உட்காரவும்.
பலன்கள்
- அஜீரணம், மலச்சிக்கல், போன்ற வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும்.
- வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கும்.
- முன் கைத்தசைகளையும், தொடைகளின் பின்பகுதி தசைகளையும் வலுப்படுத்தும்.
- இடுப்பு தொடைகள், கால் மூட்டுகள், கணுக்கால்கள் மற்றும் கெண்டைக்கால் தசைகளையும் வலுவாக்கும்.
முக்கிய குறிப்பு
முதுகு, இடுப்பு, முழங்கை, கால் முட்டிகள், தண்டுவடம், முதுகெலும்புகள் போன்ற பாகங்களில் காயம் இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ துலாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.