வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில், பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளது.
இதற்குக் காரணம் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அதுதான் உண்மை.
விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை எவ்விதமான போர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைப்பற்றியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் நிலையில் உள்ளது.
பார்லி உற்பத்தி
உலகின் டாப் 5 பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகிக்கும் நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டைக் கைப்பற்றினால் அந்நாட்டில் இருந்து பார்லி ஏற்றுமதி கட்டாயம் பாதிக்கும். இதனால் பார்லி விலை உயர்வது மட்டும் அல்லாமல் விநியோகம் குறைந்து அதிகப்படியான தட்டுப்பாடும் நிலவும்.
BIRA91 நிறுவனம்
இதுக்குறித்து BIRA91 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்கூர் ஜெயின் கூறுகையில், சர்வதேச சந்தையில் பார்லி விலை ஏற்கனவே பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தாலும், கைப்பற்றினாலும் பார்லி விநியோகம் மற்றும் விலை பாதிக்கும்.
பீர் உற்பத்தி
இதனால் அனைத்து பீர் உற்பத்தி நிறுவனங்களும் பீர் விலையைப் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டிய நிலை இப்போதே உருவாகியுள்ளது என BIRA91 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்கூர் ஜெயின் கூறியுள்ளார்.
பார்லி
இந்தியாவின் மொத்த பீர் விற்பனையில் 40-45 சதவீதம், மார்ச் – ஜூலை மாத காலத்தில் மட்டும் நடக்கும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் பீர் உற்பத்திக்குப் பார்லி மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும்.
உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் பாவம்..!
Beer companies facing big trouble on Russia-Ukraine crisis; Barley supply, price may disrupt
Beer companies facing big trouble on Russia-Ukraine crisis; Barley supply, price may disrupt ரஷ்யா – உக்ரைன் எதிரொலி: இந்திய பீர் நிறுவனங்களுக்குத் தலைவலி. விரைவில் பீர் விலை தாறுமாறாக உயரலாம்.. என்ன காரணம் தெரியுமா..?!