பல்வேறு முரண்பட்ட கருத்தியல்களைக் கொண்ட கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள தற்போதைய தமிழக சட்டப்பேரவையைப் போலவே, சென்னை மாநகராட்சி கவுன்சிலும் விசிக, முஸ்லிம் லீக், பாஜக, கம்யூனிஸ்ட் என ஒரு முரண்பட்ட கட்சிகளின் சங்கமாக அமைகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என் மொத்தம் 649 நகர்ப்புறா உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. இதில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி ஸ்வீப் செய்து வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் திமுக 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 13 இடங்களிலும் சிபிஎம், விசிக தலா 4 இடங்களிலும் மதிமுக 2 இடங்களிலும் சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அதே போல, அதிமுக சென்னை மாநகராட்சியில் 200 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, சென்னை மாநகராட்சில் 1 இடத்தில் வெற்றி பெற்ற் மாநகாட்சி கவுன்சிலில் இடம்பெற்றுள்ளது. அதே போல, அமமுகவும் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியில் 5 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், சென்னை மாநகாட்சி கவுன்சிலில், திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், மதிமுக, சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிமுக, பாஜக, அமமுக என 11 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிகள் மதச்சார்பற்ற கூட்டணியாக விளங்குகிறது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களில், திமுக, அதிமுக உறுப்பினர்களைத் தவிர, விசிக, கம்யூனிஸ்ட்கள், சிறுபான்மையினர் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். அதே நேரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக சார்பில் 1 உறுப்பினர் இடம்பெற்றுள்ளார்.
உண்மையில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட், பாஜக கவுன்சிலர்களைக் கொண்டு அமைகிற சென்னை மாநகராட்சி கவுன்சில் என ஒரு முரண்பட்ட கட்சிகளின் சங்கமமாகவும் கதம்பமாகவும் அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“