12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இந்த வாரம் தீர்மானம்



12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்பட உள்ளது.

தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு சிறுவர் நோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திடம், சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த சங்கம், தங்களது பரிந்துரைகளை முன்மொழிய உள்ளது.

இதேவேளை, 12 முதல் 16 வயது வரையிலான ஏழரை லட்சம் சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், 16 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவினை உடையவர்களில் 1.1 மில்லியன் பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.