புதுடில்லி: தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தியாவை, புதிய எரிசக்திக்கான தலைமை நாடாக மாற்றும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய எரிசக்திக்கான முன்னணி நாடாக இந்தியாவை மாற்றும். ஆனால், அது ஒரே இரவில் நடந்துவிடாது. நிலக்கரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஆகியவற்றை, இன்னும் 20 ஆண்டுகளுக்கு சார்ந்து இருக்க வேண்டிய நிலை தான் உள்ளது.இன்னும் இருபது ஆண்டுகளில், நாம் இவற்றை சார்ந்திருப்பதில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அப்போது, 37.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, மாசற்ற எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகும்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில், ‘சூப்பர் பவர்’ நாடாக மாறியுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில், எரிசக்தி மற்றி உயிரி அறிவியலில் சூப்பர் பவர் கொண்டதாக மாறும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய எரிசக்திக்கு, அரசு அளவில்லா ஆதரவை வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement