கொழும்பு:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. நம் அண்டை நாடான இலங்கையின் சர்வதேச கடல் பகுதியில் பருத்தி துறை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜன. 31ல் கைது செய்தனர்.அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிப். 21 வரை அவர்களை சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தி துறை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.’இதையடுத்து 21 மீனவர்களும் இந்திய துாதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கான கொரோனா பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின் இந்தியா அனுப்பி வைக்கப்படுவர்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 இந்திய மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது.
கொழும்பு:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.நம் அண்டை நாடான இலங்கையின் சர்வதேச கடல் பகுதியில் பருத்தி துறை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.