36 மணி நேர மின் தடை: பொதுமக்கள் அவதி!

மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சண்டிகரில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 36 மணி நேர
மின் தடை
காரணமாக தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சாலைகள் இயங்கும் சிக்னல் இயங்காததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மின்சாரத் தடையால் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

“மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால், மருத்துவமனையின் 100 சதவீத மின் தேவையை அவை பூர்த்தி செய்யாது என்பதால் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” என்று
சண்டிகர்
சுகாதார சேவைகள் இயக்குனர் சுமன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள், கோச்சிங் மையங்கள் மின் தடை காரணமாக மூடப்பட்டுள்ளன. சண்டிகரில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மின்துறையின் தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதால் தங்களது வேலை உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு ஏற்படும், மின் கட்டண உயரக் கூடும் என அச்சம் தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடனான சமாதான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.