#BREAKING || தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்ற பிரபல இஸ்லாமிய கட்சி.! நகராட்சி தேர்தல் முடிவுகள் : இரவு 9.30 மணி நிலவரம்.! 

அசாவுதின் ஓவைஸி கட்சி தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 3843 இடங்களில் 18 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது, 

மீதம் உள்ள 3824 இடங்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 

திமுக 2360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக 638 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் மூன்று இடங்களிலும், பிஜேபி ஐம்பத்தி ஆறு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 19 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாற்பத்தி ஒரு இடங்களிலும், தேமுதிக 12 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 151 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி நாற்பத்தி எட்டு இடங்களிலும் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முப்பத்தி மூன்று இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருபத்தி மூன்று இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி இரண்டு இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி நான்கு இடங்களிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முப்பத்தி நான்கு இடங்களிலும், விடுதலை சிறுத்தை கட்சி இருபத்தி ஆறு இடங்களிலும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

புதிய தமிழகம், மனித நேய ஜனநாயக கட்சி, ஜனதா தள், அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மேலும், அசாவுதின் ஓவைஸி கட்சி தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.