ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆயுத பிரயோகம் ஏதும் இல்லாமல் உக்ரைனை மூன்றாகப் பிரித்துள்ளார். உக்ரைனின் இரு கிழக்கு மாகாண பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உக்ரைனின் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாயகமாகும். இந்த கிளர்ச்சியாளர்கள் 2014 முதல் உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் இந்த முடிவினால் அச்சத்தில் உள்ள நிலையில், இரு பிராந்திய மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். இந்தப் பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியுள்ளது. விளாடிமிர் புட்டினின் இந்த முடிவை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மிகவும் விரும்புகின்றனர்.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவை கிளர்ச்சியாளர்களின் கோட்டைகள். 2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்ததில் இருந்து, கிளர்ச்சியாளர்கள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களில் தீவிரமடையத் தொடங்கியது. கிரிமியாவை இணைத்த பிறகு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களை ரஷ்ய சார்பு படைகள் கைப்பற்றத் தொடங்கின. விளாடிமிர் புடின், டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் ஆகிய இரு பகுதிகளிலும் செயல்படும் கிளர்ச்சிப் படைகளை அங்கீகரிக்கவில்லை, என்றாலும், அவர் அதற்கான சிறப்பான திட்டங்களை தயாரித்துக் கொண்டிருந்தார் எனலாம். விளாடிமிர் புடின் எப்படி ஒரே இரவில் உக்ரைனைப் பிரித்தார் என்று இப்போது உலகமே வியக்கிறது.
மேலும் படிக்க | உக்ரைனின் டோனெட்ஸ்க் – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா
விளாடிமிர் புடினின் உத்தி
விளாடிமிர் புடின் இந்த முடிவை ஒரு நாளில் எடுக்கவில்லை. டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் 60 லட்சம் மக்கள் உள்ளனர். இதில், 80 சதவீத மக்கள் ரஷ்ய மொழி பேசுகின்றனர். இந்த மக்கள் உக்ரைனின் குடிமக்களாக இருந்தாலும், அவர்கள் ரஷ்யாவுடன் இணையவே விரும்பினர். எனவே கிளர்ச்சியை அதிகப்படுத்தினால் அது ரஷ்யாவிற்கு நன்மை பயக்கும் என்பது புதினுக்குத் தெரியும்.
இரண்டு பகுதிகளும் கிழக்கு உக்ரைனின் ஒரு பகுதியாகவும் ரஷ்யாவின் எல்லையாகவும் உள்ளன. புடின் இரு நாடுகளையும் அங்கீகரித்து, இந்தப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு இப்போது ரஷ்யாவிடம் உள்ளது என்று கூறி இரண்டு இடங்களிலும் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியுள்ளார். மக்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவதைக் காணலாம்.
மேலும் படிக்க | Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்
புடினின் முடிவிற்கான காரணம்
உக்ரைன் அரசாங்கம் நேட்டோவில் சேர விரும்புவதை அறிந்த விளாடிமிர் புடின் இந்த முடிவை எடுத்தார். நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் உக்ரைனை இணைக்க அழுத்தம் கொடுக்கும் நிலையில், உக்ரைனைப் பிரிப்பதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும் என நினைத்த புடின் இதனை செய்திருக்கிறார். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் சுதந்திர நாடுகளாக இருக்கும் என்று புடின் அறிவித்த நிலையில், உக்ரைன் நேட்டோவில் சேருவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.
உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா ஏற்கவில்லை
உக்ரைனில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நிலைப்பாட்டை ரஷ்யா ஏற்கவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் இருந்து விலகி, உக்ரைனில் தலையிடக் கூடாது என ரஷ்யா விரும்புகிறது. மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் மோதல்கள் நன்கு அறிந்த விஷயம். உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அது ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். உக்ரைன் மீது தாக்குதல் நடந்தால், ரஷ்யாவை நேட்டோ நாடுகள் தாக்கும் என்பதோடு, மீண்டு ஒரு உலகப்போர் மூளும் நிலை ஏற்படும்.
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
புடினின் அகண்ட ரஷ்யா திட்டம்
விளாடிமிர் புடின் தனது எல்லை நாடுகளை பிரிக்கிறார் அல்லது இணைக்கிறார். 2008 இல், ரஷ்யா ஜார்ஜியாவை ஆக்கிரமித்தது. அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியா ஆகிய இரு மாகாணங்களையும் சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. 2014 இல், ரஷ்யா இந்த திட்டத்தின் கீழ் கிரிமியாவை இணைத்தது. கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது. இப்போது ரஷ்யா கருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. 2022 இல் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நாடுகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த பிறகு, ரஷ்யா இப்போது இங்கும் தனது வேர்களை ஊன்றுகிற்றது.
பெலாரஸ் அதிபர் தனது நாட்டை சரியான நேரத்தில் ரஷ்யாவுடன் இணைப்பேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார். வரும் நாட்களில் பெலாரசும் ரஷ்யாவுடன் இணையும். விளாடிமிர் புடின் அகண்ட ரஷ்யாவை உருவாக்கி வருகிறார். புடின் தனது இறையாண்மையைக் காக்கும் வகையில், வெளிநாட்டு தலையீடுகளை விரும்பவில்லை. உலக நாடுகள் அவரை விமர்சித்தாலும் அவர் தனது எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார். தனது எல்லையில் எந்த நாடும் தலையிடுவதை ஏற்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்