உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என அச்சம் நிலவும் இந்த நேரத்தில், உக்ரைனின் கிழக்கு மாகாணங்களின் இரு பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்து, கூடுதல் துருப்புகளை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைன் அரசு, நாடு தழுவிய அவசரகால நிலையை அறிமுகப்படுத்த உள்ளது ரஷ்யாவின் படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் நாட்டை அமைதியாக வைத்திருக்கவும் அதன் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று உக்ரைனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
அவசரகால நிலை 30 நாட்களுக்கு நீடிக்கும், மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் Oleksiy Danilov ஒரு மாநாட்டில் தெரிவித்தார். தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றம் ஒப்புதல் வாக்களிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Russia-Ukraine Crisis: அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்!
அவசரகால நிலையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கப்படும். போக்குவரத்தின் மீதான கட்டுப்பாடுகள், முக்கியமான உள்கட்டமைப்புக்கான கூடுதல் பாதுகாப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள் மீதான தடை ஆகியவை இதில் அடங்கும். மேலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பிராந்திய அதிகாரிகள் முடிவுகளை எடுக்க முடியும், டானிலோவ் கூறினார்.
நாடாளுமன்ற உறுட்ப்பினர்கள் சிலர் இராணுவச் சட்டத்தை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்படலாம். இதில் கூட்டங்கள், இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான தடைகள் ஆகியவை இதில் அடங்கும். எல்லை பகுதிக்கு அருகில் வெளிநாட்டினர் தங்குவது, ரேடியோக்கள், ட்ரோன்களின் விமானங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் கட்டிடங்களை படம்பிடித்தல் மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்பாக புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில எல்லைக் பாதுகாவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைனின் டோனெட்ஸ்க் – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளைத் தவிர, உக்ரைனில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அவசரகால நிலை பொருந்தும். ரஷ்ய ஆதரவு போராளிகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை 2014 முதல் கட்டுப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா அவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தது.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்