Tamil Nadu News Updates: பிரபல மலையாள நடிகை லலிதா(74) உடல்நலக் குறைவால் கோச்சியில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – திமுக கூட்டணி அமோக வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளிலும், 132 நகராட்சிகளிலும், 434 பேரூராட்சிகளிலும் வெற்றி கொடி நாட்டியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்
உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால், அங்கிருந்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். 242 பயணிகளுடன் இந்திய விமானம் டெல்லிக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் நீண்ட நாள்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்பனையாகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிலாந்து கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து
இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு வியாழக்கிழமை முதல் நீக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் தலைமை இல்லாததே, அக்கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டெபாசிட் இழக்க காரணம் என்றும், காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்
1,591 கூடுதல் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தற்காலிகப் பணியிடங்கள் அக்டோபர் 31, 2024 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவற்றின் அனைத்து 10, 12ம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவில்’ மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அனைவரும் புதிய இடங்களில் மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிய சி.ஆர்.பி.எஃப் வீரரை கண்டுபிடிக்க கோரி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில்’ சத்தீஸ்கர் காவல்துறை உதவியுடன் சி.ஆர்.பி.எஃப். வீரரை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி 194வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் விமலா கர்ணா அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோரின் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ரூ. 18,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் அதிகாரபலம், பணபலம், கூட்டணி பலத்தை எதிர்த்து போட்டியிட துணிந்த ம.நீ.ம. வேட்பாளர்கள்தான் வெற்றியாளர்கள்! கமல்ஹாசன் அறிக்கை!
உயிரே உறவே தமிழே… pic.twitter.com/XbtweyfePW
— Kamal Haasan (@ikamalhaasan) February 23, 2022
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன் பாகம் -1’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு. திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சேலம் திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, லக்கிம்பூர் கேரி மாவட்டம் பன்பீர்பூரில் உள்ள வாக்குசாவடியில், வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து’ 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார்.
திமுக நிர்வாகியை தாக்கியதாக, ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட வழக்கில், ஜாமின் கோரிய மனுவில்’ இருதரப்பு வாதங்களை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை செய்துள்ளார்.
தேர்தலன்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். போட்டித் தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மே மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது
தமிழக அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டடத்தில் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் திமுக – 69.07% , அதிமுக – 11.94% உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் நகராட்சிகளில் திமுக – 61.41% , அதிமுக – 16.60 % உறுப்பினர்களை பெற்றுள்ளன என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களால், சிஆர்பிசி, ஐபிசி சட்ட அதிகாரம் பறிக்கப்படாதா என்றும், நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத்தான் சிவில் நீதிமன்றங்கள் உள்ளதே என்றும், நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நில அபகரிப்பு வழக்குகளாக கருதப்படுமா? ,
தனிநபர் விவகாரங்களில் ஏன் அரசு தலையிட வேண்டும்? என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி
2019ஆம் ஆண்டு ஜூன் 23இல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனிநீதிபதி கல்யாணசுந்தரத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 50 லட்சமாவது பயனாளியான மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.
உத்தரப் பிரதேசத்தில் 4 ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ120 குறைந்து ரூ37,888க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ15 குறைந்து ரூ4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் மீதான அத்துமீறல்களை கண்டித்து ரஷ்யா மீது ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. திமுக நிர்வாகியை தாக்கியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், ராயப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் 4 ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. 59 தொகுதிகளில் 624 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.