அடுத்த குடியரசு தலைவர் இவர்தனா? ரகசிய ஆலோசனை., மறுப்பு., விருப்பம்.!

வருகின்ற ஜூலை மாதத்துடன் தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது ஒரு மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், இந்த அணியின் சார்பாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளதாகவும், அவர் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் முதல்வர் நிதிஷ்குமார் உடன் சந்திப்பு நடத்தியது,  வெளியான தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியான தகவல் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் தெரிவிக்கையில், “நான் ஜனாதிபதி குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறுவது, அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியாகும். இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. இதற்கான முயற்சி நடக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

அதே சமயத்தில் பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்ஜி தெரிவிக்கையில், “நிதிஷ்குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவில் பிகார் மணிலா முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.