2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது.
ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!
இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது.
ரஷ்யா கற்ற பாடம்
இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய பாடத்தைக் கற்ற நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கட்டாயம் பொருளாதாரம், வர்த்தகத் தடை உத்தரவுகளை வெளியிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து பல ஏற்பாடுகளைச் செய்துள்ள விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு.
உக்ரைன் மீது போர்
இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் படி கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மதியத்திற்குள் புதிதாக 2 பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்கா தடை
இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது சர்வதேச சந்தையில் இருந்து முதலீட்டைத் திரட்டுவதற்குத் தடை விதிக்கும் புதிய உத்தரவை வெளியிட உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தடை விதிக்கும்.
டிஜிட்டல் கரன்சி
இதுபோன்ற மோசமான நிலையைச் சமாளிக்கும் வகையில், உலக நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிக்க டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி அரசு பிடியில் சிக்காமல் நிறுவனங்களும், முதலீட்டாளர்களிடம் வர்த்தகம் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.
செக் பாயின்ட்
பொதுவாக வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகள் வாயிலாகவும், பணத்தைப் பெறும் நாட்டின் அரசு (மத்திய வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு) அனுமதி உடன் தான் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தச் செக் பாயின்டை ரஷ்யா தனது நாட்டின் டிஜிட்டல் கரன்சி மூலம் எளிதாகச் சரி செய்துக்கொள்ள முடியும்.
பிற நாடுகள்
மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளின் தடை உத்தரவு கடுமையாக இருந்தாலும், அதனுடைய நட்பு நாடுகள் எப்படி இயங்குகிறது, என்ன தடை விதிக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாது, முக்கை நுழைக்கவும் முடியாது. மேலும் வங்கியைப் போலவே கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமும் பரிமாற்றத்தை பெரிய அளவில் கண்காணிக்கிறது, ஆனால் கட்டுப்படுத்த முடியாது.
பரிமாற்றத்தை மறைக்கும் தொழில்நுட்பம்
இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. ரஷ்யாவிடம் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை பிளாக்செயின் தளத்தில் மறைக்கப் பல தொழில்நுட்ப சேவைகளை வைத்துள்ள காரணத்தால் ரஷ்யா அரசு, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் செய்யும் பரிமாற்றத்தை அழிக்க முடியும்.
டிஜிட்டல் ரூபிள்
இதனிடையில் ரஷ்ய அரசு சொந்தமாகத் தனது நாட்டிற்கான டிஜிட்டல் கரன்சி அதாவது டிஜிட்டல் ரூபிள்-ஐ தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் ரூபிள்-ஐ வைத்து வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை டாலருக்கு மாற்றாமல் செய்ய முடியும். இதனால் 2014ல் மேற்கத்திய நாடுகளின் தடை மூலம் ஏற்பட்ட பாதிப்புத் தற்போது இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் மத்திய வங்கி
அக்டோபர் 2020 இல், ரஷ்யாவின் மத்திய வங்கி உயர் அதிகாரிகள் புதிய “டிஜிட்டல் ரூபிள்” மூலம் ரஷ்யா அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் மற்றும் பொருளாதாரத் தடைகளைச் சிறப்பாக எதிர்த்துச் சுதந்திரமாக இயங்க முடியும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வங்கி முறை
ரஷ்யா உடன் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய விரும்பும் எந்தவொரு நாட்டுடனும் சர்வதேச வங்கி முறைக்கு வெளியே பரிவர்த்தனைகளை நடத்த ரஷ்ய நிறுவனங்களை இது அனுமதி அளிக்கப்படும் எனவும் ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Russia could use cryptocurrency and Digital currency against US sanctions; Putin Master plan
Russia could use cryptocurrency and Digital currency against US sanctions; Putin Master plan அமெரிக்காவால் ரஷ்யாவை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..!