உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் கீவ் நகரை கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷ்ய சைபர் படையால் முடக்கப்பட்டு இணையதள தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE இன் கூற்றுப்படி, “இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது,” என அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
delete google history: உங்கள் ரகசிய தகவல்களை கூகுள் சேமிக்கிறது! அதை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
பல மாதங்களாக திட்டம்
இந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை ரஷ்யா, கடந்த பல மாதங்களாக நடந்த திட்டம் தீட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சைமென்டெக் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. சைபர் செக்யூரிட்டி நிறுவனம் மேலும் கூறுகையில், “உக்ரைன் மற்றும் லாட்வியா முழுவதும் உள்ள கணினிகளில் இந்த தீங்கிழைக்கும் மென்பொருளின் செயல்பாட்டை நாங்கள் பார்த்தோம்,” எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், முதற்கட்ட ஆய்வில் ரஷ்யா கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இதற்கு முன் பலமுறை சைபர் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளதுள்ள நிலையில், சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உக்ரைனை குறிவைக்கும் திறன் கொண்ட மென்பொருளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதன் நகலை ஆல்பாபெட்டின் க்ரூவ்சோர்ஸ் சைபர் செக்யூரிட்டி தளமான வைரஸ் டோட்டலில் பதிவேற்றியுள்ளனர். இந்த மென்பொருளுக்கு டிஜிட்டல் முறையில் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?
இந்தச் சான்றிதழ் ஹெர்மெட்டிகா டிஜிட்டல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Xerofox நிர்வாகி பிரைன் கிம் கருத்துப்படி, “அத்தகைய சான்றிதழைப் பெறுவது பெரிய விஷயமல்ல. எந்த நிறுவனத்தின் பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டதோ அந்த நிறுவனத்தின் முகவரி ஓராண்டு பழமையானது மற்றும் அதற்கு தற்போது இணையதளம் கூட இல்லை,” என்று தெரிவித்துள்ளது.
வான்வெளியை மூடிய உக்ரைன்
ரஷ்யா உள்வரும் விமானங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அஞ்சி, உக்ரைனும் தனது வான்வெளியை மூடியுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக சிவில் விமானங்களுக்கு வான்வெளி மூடப்பட்டுள்ளதாக உக்ரைனின் விமான போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு வான்வெளி மூடப்பட்டுள்ளது. ரஷ்யா, பெலாரஸின் எல்லையோரப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பறப்பதற்கு எதிராக ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.
spam call blocker: வெறுப்பேத்தும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்ப வேண்டுமா… உங்களுக்காக உதவும் செயலிகள்!
மேலும் நாட்டில் விமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ஃப்ளைட் டிராக்கர் மென்பொருளின் படம், உக்ரைன் வான்வெளியை மூடிய பிறகு நூற்றுக்கணக்கான விமானங்கள் திருப்பி விடப்பட்டதைக் காட்டுகிறது. ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியும் ரஷ்யா-உக்ரைன் மோதல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More:
பிரபலங்களுடன் டேட்டிங் செய்ய ஒரு ஸ்பெஷல் ஆப்?
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – ‘Truth Social’ ஆப் மூலம் Twitter பேஸ்புக்குக்கு செக் வைத்த டிரம்ப்!
PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா – இல்லைன்னா பிரச்னை தான்!