பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் பேசினால் அவர் நிச்சயம் கேட்பார். போரும் நிற்கும் என்று உக்ரைன் நாட்டு தூதர் இகோர் போலிகா கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து நகரங்களும் பற்றி எரிகின்றன. விமான நிலையங்கள், விமானப்படை தளங்களை ரஷ்யா படையினர் நிர்மூலமாக்கியுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த அதி வேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் தொடர்ந்து திணறி வருகிறது. பல நாடுகளிடமும் உக்ரைன் உதவி கேட்டுள்ளது. இந்தியாவிடமும் அது உதவி கோரியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் இகோர் போலிகா கூறுகையில், இந்தியா சர்வதேச அளவில் முக்கியமான நாடாகும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாகும். இந்தியா எங்களுக்கு உரத்த குரலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது உக்ரைனில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
மமதாவின் குசும்பு.. அதிகாலை 2 மணிக்கு சட்டசபையைக் கூட்ட பரிந்துரை.. ஆளுநருக்கு செக்!
பிரதமர் நரேந்திர மோடிஜி சக்தி வாய்ந்த, உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் நிலையில் உள்ள தலைவர். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் நல்லதொரு உறவு, நீண்ட கால உறவு உள்ளது. மோடிஜி மட்டும் புடினுடன் தொலைபேசியில் பேசி போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டால் நிச்சயம் புடின் கேட்பார்.
இந்தியா உக்ரைன் விவகாரத்தில் உலகத் தலைமையுடன் கூடிய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். எங்களது பாதுகாப்பு மட்டுமல்லாமல் எங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளது. இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்புகிறோம், கேட்டுக் கொள்கிறோம். உக்ரைனில் 15,000க்கும் மேற்பட்ட இந்தியர்களும் வசிக்கிறார்கள். அவர்களது பாதுகாப்பும் முக்கியமாகும்.
எனது இளம் மாணவர் பருவத்திலிருந்தே இந்தியாவை நான் அறிவேன். பேச்சுவார்த்தைகளிலும், சமரசம் மேற்கொள்வதிலும் இந்தியா திறமையான அனுபவம் வாய்ந்த நாடு. சாணக்கியர் இருந்துள்ளார். நாகரீகங்கள் உருவாகாத காலத்திலேயே இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நல்ல போக்குவரத்து இருந்துள்ளது.
மகாபாரத கால கட்டத்திலேயே போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்து முக்கியத் தத்துவங்களை உள்ளடக்கிய ஒப்பற்ற
பஞ்சசீல கொள்கை
யை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு இந்தியா. எனவேதான் நாங்கள் இப்போது இந்தியாவின் உதவியை நாடுகிறோம் என்றார் இகோர்.
ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கை
இந்தியா சீனா இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் பஞ்சசீல கொள்கை. 1954ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்போது இந்த பஞ்ச சீல கொள்கை அடிப்படையில்தான் அது உருவாக்கப்பட்டது. அந்த அமைதி உடன்படிக்கையின் தொடக்க வாக்கியமாகவும் இந்த பஞ்ச சீல கொள்கை தத்துவம்தான் வைக்கப்பட்டது.
ஜெயலலிதா பிறந்த நாள்.. அதிமுக கூட இப்படி செஞ்சதில்லையே.. அசத்திய ஸ்டாலின்!
இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும், சீன அதிபராக இருந்த சூ என் லாயும் இணைந்து இதை உருவாக்கினர். இரு நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இந்த பஞ்ச சீல கொள்கை தற்போது பல்வேறு உலக நாடுகளாலும் ஏற்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட பஞ்ச சீல கொள்கையை புகழ்ந்து உக்ரைன் நாட்டு தூதர் இந்தியாவிடம் உதவி கேட்டிருப்பதால் இது எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை.