போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த பிரதமர் மோடி தலையீட வேண்டும் என்று தெரிவித்துள்ள இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, இந்த பிரச்னை தீர்க்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”ரஷ்யாவுடன் இந்தியா சிறந்த நல்லுறவை பேணி வருகிறது. தற்போது உக்ரைனில் நிலவும் சூழலை கட்டுப்படுத்த இந்தியா தலையிட வேண்டும்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி உடனடியாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினையும், எங்கள் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் தொடர்பு கொண்டு பேச வேண்டும். எத்தனை உலக நாடு தலைவர்களின் பேச்சை புதின் கேப்பார் என எனக்கு தெரியவில்லை. ஆனால், பிரதமர் மோடி பேசினால் அது நம்பிக்கையளிக்ககூடியதாக இருக்கும். புடின் குறைந்தபட்சம் போர் நிறுத்தம் குறித்து யோசிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவிடமிருந்து ஆதரவான அணுகுமுறைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு வலுவான குரல் இருப்பதால் அவர் கூறுவதை புடின் சிந்திப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM