இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கடிதம்

உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்க்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்…
மதுரையில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதட்டத்தோடு என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
image
உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும் குண்டு வெடிப்புகள் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. ட்விட்டரில் உக்ரைனுக்கான இந்திய தூதர் விடுத்துள்ள இந்த செய்தி அங்குள்ள கடுமையான சூழலை உறுதி செய்கிறது.
நிலைமை மிகப் பதட்டமாக உள்ளது. நிச்சயமற்றதாகவும் உள்ளது. இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. வான் வழி மூடப்பட்டு விட்டது. ரயில் அட்டவணைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாலைகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
image
இத்தகைய சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகமும் உச்சபட்ச அளவிலான அரசு முறை தொடர்புகளின் மூலம் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.