விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா 2014ஆம் ஆண்டில் கிரிமியா-வை கைப்பற்றிய நாளில் இருந்து உக்ரைனை கைப்பற்ற வேண்டும் எனப் பெரும் கனவில் இருக்கிறது.
ஆனால் கிரிமயா-வை கைப்பற்றிய பின்பு அமெரிக்கா உட்படப் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதார தடையை விதித்த நிலையில், ரஷ்யா தனது வேகத்தைக் குறைத்து விவேகமாகச் செயல்படத் துவங்கியது.
ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் தடைகளைச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கடந்த 7 வருடத்தில் பல மாற்றத்தை ரஷ்யா பொருளாதாரம் மற்றும் நிதியியல் சார்ந்து செய்துள்ளது.
நாணய இருப்பு சந்தை
ரஷ்யா தனது நாணய இருப்பு சந்தையை வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக “fortress Russia strategy” நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் நாணய இருப்பு வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. இதன் மூலம் பேங்க் ஆப் ரஷ்யாவிடம் தற்போது வரலாற்று உச்ச அளவான 630 பில்லியன் டாலர் உள்ளது.
அமெரிக்கப் பத்திரங்கள்
மேலும் ரஷ்யாவிடம் தற்போது அமெரிக்காவின் பத்திரங்கள் ஏதுமில்லை. 2013ல் 170 பில்லியன் டாலர் அளவிலான அமெரிக்க அரசு பத்திரங்களை ரஷ்யா வைத்திருந்த நிலையில் 2014ல் இருந்து படிப்படியாகக் குறைத்து வந்தது. 2018ல் மொத்தமாக வெறும் 20 பில்லியன் டாலராகக் குறைந்தது தற்போது 10 பில்லியன் டாலருக்கு குறைவாக வைத்துள்ளது ரஷ்யா.
இதன் மூலம் அமெரிக்கா தடை விதித்தாலும், ரஷ்யாவுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
நாணய இருப்பு
2014 வர்த்தகத் தடைக்குப் பின்பு ரஷ்யா தனது நாணய இருப்பை டாலர் மற்றும் யூரோ-வில் இருந்து தங்கத்திற்கும், சினாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரென்மின்பி-க்கு மாற்றியுள்ளது. தற்போது டாலர் மற்றும் யூரோவை குறிப்பிடத்தக்க அளவிற்கு வைத்திருந்தாலும் வர்த்தகத்திற்குத் தேவையான அளவு மட்டுமே வைத்துள்ளது.
இதற்கிடையில் சீனா உடனான நட்புறவை மேம்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுச் சொத்துக்கள்
2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ல் ரஷ்யா உலக நாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்களைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் சொத்துக்களைக் குறைத்துவிட்டு, சீனா, ஜப்பான் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்துள்ளது.
இப்படி வெளிநாட்டில் இருந்தும், வெளிநாட்டை நம்பியிருக்கும் சொத்துக்களைத் தொடர்ந்து குறைந்தது ரஷ்யா வலிமை அடைந்து வருகிறது.
கிரிமியா தாக்குகலுக்குப் பின்
உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க 2014 முதல் திட்டமிட்டு வருகிறது ரஷ்யா, இந்தப் போரின் மூலம் வரும் பின்விளைவுகளை ஏற்கனவே திட்டமிட்டுப் பல வழிகளில் தனது பாதிப்பைக் குறைத்துள்ளது ரஷ்யா. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடை எதிர்க்க முழுவீச்சில் தயாராகியுள்ளது ரஷ்யா.
ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்
ஆனாலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது. இதேவேளையில் NATO படைகள் களத்தில் இறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Russia has been positioning itself for international sanctions from 2014 crimea capture
Russia has been positioning itself for international sanctions from 2014 Crimea capture இந்த நாளுக்காகக் காத்திருந்த புதின்.. உக்ரைனை திட்டம் போட்டு தூக்கும் ரஷ்யா..!