"இன்னா மேன் சர்க்கஸ்லாம் பண்றே".. ரூப் டாப்பிலிருந்து ஜன்னல் வழியாக காருக்குள் புகுந்த பிரியங்கா!

உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது கார் மேலே இருந்து ஜன்னல் வழியாக காருக்குள் புகுந்து
பிரியங்கா காந்தி
அத்தனை பேரையும் அசர வைத்து விட்டார்.

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி தற்போது அசத்த ஆரம்பித்துள்ளார். அவர் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது. கூட்டத்தினரைப் பார்த்தாலே போதும் உற்சாகமாகி விடுகிறார் பிரியங்கா. கார் ஜன்னல் வழியாக கை குலுக்குவது, காரை விட்டு வெளியே வந்து கூட்டத்தினருடன் பேசுவது, கார் மேலே ஏறி அமர்ந்து கை காட்டுவது, பேசுவது என்று கலக்குகிறார்.

சமீபத்தில் கூட அவர் பிரசாரம் முடித்து விட்டு வரும் வழியில் பெரும் திரளான பாஜகவினர் கட்சிக் கொடியுடன் சாலையில் குழுமியிருந்தனர். அவர்களையும் விடவில்லை பிரியங்கா. கார் ஜன்னல் வழியாக தனது உடலை நீட்டி அவர்களுடன் கை குலுக்கினார். செல்பி எடுத்துக் கொண்டார். பிறகு
காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் அறிக்கைகளையும் கொடுத்து அசத்தினார்.

இந்த நிலையில் அவர் ஒரு வித்தியாசமான செயலைச் செய்து அனைவரையும் அசரடித்துள்ளார். பிரசாரக் கூட்டம் ஒன்றுக்காக போய்க் கொண்டிருந்தபோது வழியில் மக்கள் கூட்டத்தை சந்தித்தார். அவரது காரை சுற்றிலும் மக்கள் சூழ்ந்து கொண்டு காங்கிரஸுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து அவர் கார் டாப்பில் ஏறி நின்று மக்களைப் பார்த்துக் கையசைத்தார். உற்சாகத்துடன் வாக்கு சேகரித்தார்.

கொஞ்சமும் பயப்படாமல் படு தில்லாக கார் ரூப் டாப்பிலிருந்து முன்பகுதிக்கு வந்து அமர்ந்தபடி வாக்கு சேகரித்த அவர் பின்னர் மீண்டும் டாப்புக்குப் போனார். அதன் பின்னர் டாப்பிலிருந்து அப்படியே ஜன்னல் வழியாக காருக்குள் லாவகமாக உள்ளே புகுந்தபோது கூட்டத்தினர் ஆர்ப்பரித்துக் கோஷமிட்டனர். ஒரு ஸ்டண்ட் மேன் செய்யக் கூடிய காரியத்தையெல்லாம் படு கூலாக பிரியங்கா காந்தி செய்தது அனைவரையும் வியப்படைய வைத்தது.

பிரியங்கா தனது செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் செம ஃபிட்டாக இருப்பதாக பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர். அரசியல்வாதிகள் ஸ்டண்ட் அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம்.. ஆனால் ஒரு “ஸ்டண்ட் உமன்” செய்வது போன்று பிரியங்கா காந்தி காட்டிய வித்தையை இன்றுதான் அனைவரும் பார்க்க நேரிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.