கருங்கடலில் துருக்கிய சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் Odessa நகரிலிருந்து ருமேனியாவுக்கு துருக்கிக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் மீது குண்டு தாக்கியதாக துருக்கியின் NTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூபிட்டர் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல், துருக்கியின் YA-SA ஷிப்பிங் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
NTV-யின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தின் விளைவாக கப்பலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
கப்பல் எந்த உதவியையும் கோரவில்லை என்று துருக்கிய கடல்சார் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஊடக அறிக்கையின்படி, கப்பல் உக்ரைனின் Odessa-வில் இருந்து 92.6 கிலோமீட்டர் தெற்கே தாக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகில் பொதுமக்கள் கப்பல் ஒன்று தாக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
முன்னதாக, அசோவ் கடலில் இரண்டு ரஷ்ய சரக்குக் கப்பல்கள் உக்ரேனிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு உட்பட்டன, இதன் விளைவாக பணியாளர்களில் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.