உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய,உக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான [email protected] ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரேன்மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு நாட்டு தரப்பினருக்கும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை உக்ரேனின் பதிலடி காரணமாக ரஷ்யாவின் 8 வானூர்திகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் 50 உக்ரேன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 10 பொது மக்களும் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரேன் துருப்புக்கள்
ரஸ்யாவுக்கு எதிராக திரளும் அண்டைநாடுகள்! ஐரோப்பாவும் இணைகிறது! நியாயம் கூறும் ரஸ்யா!