Tamilnadu Govt release helpline number for Ukraine live Tamil people: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்கு தமிழக அரசு மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது. முன்னதாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் ஆரம்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேறும் படி இந்திய அரசுக் கேட்டுக்கொண்டது. மேலும் இந்தியர்கள் விரைவாக வெளியேற கூடுதல் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தியர்களை மீட்க சென்ற விமானம் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. இதனையடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் பிற முக்கிய முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர், உதவிக் கோரி தமிழக அரசை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை விமான நிலைய புதிய முனையம்; பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன?
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அயலக அணிச் செயலாளருமான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்க : [email protected] என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எம்.பி அப்துல்லா மேலும் கூறுகையில், முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் மற்றும் வேலைக்காக உக்ரைன் சென்றவர்கள் எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டு வருகிறோம். விரைவில் உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கப்படுவார்கள் என்று கூறினார்.