உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

சோவித் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷியா அதிரடியாக போர் தொடுத்துள்ளது. தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நடத்திவரும் தொடர் வான்வழி தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களும் மடிந்து வருகின்றனர்.

இதனால் பணி நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 5,000 தமிழர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரஷியா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக தமது நாட்டுடனான சர்வதேச பயணிகள் விமான சேவையை உக்ரைன் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவியைக் கேட்ட உக்ரைன் தூதர்.. ஆனால் நேருவை புகழ்ந்து பேசிட்டாரே!

இதனையடுத்து, உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதலிகளை வழங்கவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேரியா, ஸ்லோவாக் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உள்ள அதிகாரிகள் குழுவை உக்ரைனுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியை இந்தியாவில் இருந்து ஒருங்கிணைக்கவும் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரத்தின் அதிகாரிகள் குழு உக்ரைன் -ஹங்கேரி எல்லை பகுதியான ஜோஹன் சென்றடைந்துள்ளதாக
இந்திய தூதரகம்
தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.