ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.
இதில், உக்ரைனில் உள்ள 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கூறியதாவது:-
மேலும், பைலர் பிழை காரணமாக சு-25 தாக்குதல் ஜெட் இழந்ததை உறுதிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்