ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.
இதற்கு மத்தியில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்..
ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்