மாஸ்கோ:
உக்ரைன் மீது படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன் ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது என்று விளக்கினார்.
உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா ஒரு அங்கமாகவே உள்ளதால், உலகப் பொருளாதார அமைப்பைச் சேதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளின் அடிப்படையில் நடப்பதை எதிர்கொள்ள ரஷியா தயாராக இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்..
.உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி