ரஷ்யா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உக்ரைனுக்கு எதிரான இந்த போர் தருணத்தில் ரஷ்யாவில் இருப்பது மிகுந்த உற்சாகமளிப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக புதன்கிழமை இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் தாம் ரஷ்யா வந்திருந்த நேரம் பார்த்து போர் நடைபெறுவதாகவும், இது மிகுந்த உறசாகமளிப்பதாகவும் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
போர் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யாவில் இருப்பதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு பொறுப்பான நாட்டின் கடமையாகும் என பதிலடி கொடுத்துள்ளது.