ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தெளிவான முடிவுகளை மேற்கத்திய உடன் எடுக்காதப்படாத நிலையில், பொறுமையை இழந்த விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) ஏற்கனவே ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியில் கைப்பற்றிய டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) வாயிலாக உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போர் தொடுக்க உத்தரவிட்டார் விளாடிமிர் புடின்.
இந்திய மக்களை வாட்டிவதைக்க போகும் ரஷ்யா-உக்ரைன் போர்..!
உக்ரைன் மீது போர்
மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை புடின் உடன் சேர்ந்து ரஷ்ய பாதுகாப்புத் துறை இன்று காலையில் எடுத்த நிலையில், ரஷ்யா அதிபர் தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
பீரங்கி வெடிக்கத் துவங்கியது
புடின் தனது பேச்சை முடித்த அடுத்த நொடியில் கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து குண்டுகள் பறக்கத் துவங்கியது, பீரங்கி வெடிக்கத் துவங்கியது. இதேவேவையில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சமாதான பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா விளாடிமிர் புடின் இதைப் பொருட்படுத்தவில்லை.
உலக நாடுகளுக்கு மிரட்டல்
மேலும் உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் ஆதரவு அளிக்கும் நிலையில், இன்று புடின் பேசுகையில், ரஷ்யாவின் செயலுக்கு எந்த நாடு தடையாக இருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திராத பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் கோரிக்கை
உக்ரைன் நேட்டோவில் இணைவதைத் தடுக்கவும், மாஸ்கோ பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் ரஷ்யா வைத்த கோரிக்கையை, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புறக்கணிப்பதே இந்த பேருக்கு காரணம் என குற்றம் சாட்டினார், உக்ரேனிய படைவீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுவிட்டால் போர் மண்டலத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும் என்றும் புடின் கூறியுள்ளார்.
Putin warned western countries, USA, EU on Shock Russia war declare on Ukraine
Putin warned western countries, USA, EU on Shock Russia war declare on Ukraine உலக நாடுகளை மிரட்டும் விளாடிமிர் புதின்.. குழப்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன்..!