கனடா தலைநகர் ஒட்டவாவில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை திரும்பப் பெறப்படுகிறதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மூலம் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அவசர நிலையை திரும்பப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.