கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது.
தேசியக் கொடி குறித்துக் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதை எதிர்த்துக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா -வை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கிய நிலையில், 5வது நாளாகச் சட்டப்பேரவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் விவாதம் செய்யாமலேயே இரு முக்கிய மசோதாக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுக் கூட்டம் நிறைவடைந்தது.
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..!
2 மசோதா
கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2 மசோதாவில் ஒன்று அமைச்சர்கள் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் மசோதா, மற்றொன்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் மசோதா, 2022.
முதல்வர் சம்பளம்
இந்த மசோதா மூலம் கர்நாடக முதலமைச்சரின் சம்பளம் மாதம் ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் அமைச்சர்களின் சம்பளம் ரூ.40,000-லிருந்து ரூ.60,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவு (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவு
மேலும், அமைச்சர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு மாதம் ரூ.80,000 லிருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடியிருப்பு மற்றும் தளவமைப்பு மற்றும் தோட்டங்களின் பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்புக்கான கொடுப்பனவு மாதத்திற்கு ரூ.20,000 லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் செலவுகள்
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குப் பெட்ரோல் செலவுகளுக்கு அளிக்க வேண்டிய கொடுப்பனவு அளவு வருடத்திற்கு 1000 லிட்டரில் இருந்து 2000 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் ஒரு நாள் சுற்றுலா உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர்
சட்டப் பேரவைத் தலைவர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் ரூ.50,000 இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர்களின் மாத சம்பளம் ரூ.40,000 இருந்து ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
எம்எல்ஏ-வின் சம்பளம் 25,000 ரூபாயில் இருந்து 40000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவு (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயணக் கொடுப்பனவு அளவை மாதம் 60000 ரூபாயாகவும், பென்ஷன் அளவை 50000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
92.4 கோடி ரூபாய் கூடுதல் சுமை
இந்தச் சம்பளம், பென்ஷன் மற்றும் கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் கர்நாடக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 92.4 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
Karnataka CM, Ministers salary increased by 50 percent; 2 bills passed in Assembly
Karnataka CM, Minister’s salary increased by 50 percent; 2 bills passed in Assembly கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு.. 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!