காஞ்சிபுரம் சித்திஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்டது.
இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள 61 ஆயிரம் சதுரடி நிலம் தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 3 கோடி ரூபாய் வாடகை செலுத்தப்படாமல் உள்ளதால் அந்நிலத்தை மீட்டு அங்குள்ள கட்டிடத்துக்கு சீல் வைக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் களம் இறங்கினர்.
இதையடுத்து அந்நிறுவனம் தாமாக முன்வந்து கோவில் நிலத்தையும், கட்டிடத்தையும் ஒப்படைத்தது.