மும்பை அருகே காணாமல்போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மும்பையில் பிரபாதேவி பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நாய் ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் விஸ்கி என செல்லப் பெயரிட்டு ஆதரவு கொடுத்து வந்தனர். அங்குள்ள அனைவரிடமும் அன்பாக பழகிவந்த விஸ்கி கடந்த எட்டாம் தேதி காணாமல் போயுள்ளது. இதனால் மனமுடைந்த அப்பகுதி மக்கள் மிஸ்ஸான விஸ்கியை வெகுவாக மிஸ் செய்தனர்.
ஆனால் எப்படியோ 7 நாட்களுக்குப் பிறகு வில்சன் கல்லூரி அருகே விஸ்கி இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் டாக்சியில் அழைத்து வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் நாய்க்கு ஆரத்தி எடுத்து, இனிப்புகளை வழங்கியும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM