சப்ளை பாதிக்கப்படலாம் என்ற பதற்றத்தின் மத்தியில் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில், அலுமினியம் விலையானது வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது.
இது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சப்ளை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
மேலும் அதிகரித்துள்ள மின்சார கட்டணம் காரணமாகவும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அலுமினியம் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
மெட்டல்கள் விலை அதிகரிக்கலாம்
அலுமினியம் மட்டும் அல்ல, நிக்கல், எனர்ஜி உள்ளிட்டவற்றின் விலைகளும் உச்சத்தினை எட்டியுள்ளன. இது மேற்கொண்டு விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் உற்பத்தியாளர்களின் விலையினை ஊக்குவிக்கலாம். இதனால் ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் உற்பத்தியினை நிறுத்தி வைக்கும் நிலைக்கு கூட தள்ள்ப்படலாம்.
கேஸ் விலை
இது மீண்டும் எப்போது உற்பத்தியினை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குறியும் இருந்து வருகின்றது.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனமான, Gazprom-க்கு சொந்தமான 11 பில்லியன் டாலர் மதிப்பிலான, நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைனை நிறுத்தியுள்ளது. இதுவும் ஐரோப்பாவில் எரிவாயு விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உற்பத்தி
ரஷ்யாவின் அலுமினியம் உற்பத்தி சர்வதேச அளவில் 6%மும், நிக்கல் உற்பத்தியில் 7%மும் பங்கு வகிக்கிறது. 2018ல் ரூசல்( RUSAL) மீதான தடை காரணமாக அலுமினியம் விலையானது சில தினங்களில் 35% வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது ரஷ்யாவில் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளராகும். அப்படிப்பட்ட நிலையில் இன்று ரஷ்யா- உக்ரைன் இடையேயான பதற்றமானது, நிச்சயம் அதன் மொத்த உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இது சர்வதேச அளவில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தியில் முக்கிய பங்கு
வாகன உற்பத்தியில் முக்கிய மூலதனங்களாக இருப்பது அலுமினியம், நிக்கல், காப்பர், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்கள் தான். ஆக இந்த உலோகங்கள் விலை உச்சம் தொடும்போது அது உற்பத்தி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே சிப் பற்றாக்குறை காரணமாக பல நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் விலை அதிகரிக்கலாம்
மாற்று வழிகளை தேடினாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் வாகன உற்பத்தி செலவினங்கள் என்பது உச்சம் தொடலாம். இது கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் விலையை அதிகரிக்க தூண்டலாம். ஏற்கனவே இந்தியாவில் சில வாகன உரிமையாளர் மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக விலையை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் இந்த உலோகங்களின் விலை அதிகரிப்பு மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு தூண்டலாம். இதனால் மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாகனங்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம்.
Russia – ukraine crisis! LME aluminum hits record high amid supply fears, it may boost up vehicles price
Russia – ukraine crisis! LME aluminum hits record high amid supply fears, it may boost up vehicles price/கார், பைக் விலை விரைவில் உச்சம் தொடலாம்.. என்ன காரணம் தெரியுமா?